மகள் கொடுமை தாங்க முடியலை கருணை கொலை செய்ய உதவுங்கள்: தேனி கலெக்டரிடம் மூதாட்டி மனு

தேனி: மகளின் கொடுமை தாங்க முடியாத தாய், தன்னை கருணை கொலை செய்யக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காலனியில் வசிப்பவர் பெருமாள் மனைவி பாக்கியலட்சுமி (62). இவர் நேற்று தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு 2 மகள்கள் உள்ளனர்.

திருமணமாகி விட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்து விட்டார். 2வது மகளின் கணவர் இறந்து விட்டார். இதனால் அவர், வேறு ஒரு நபருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருகிறார். நான் வருமானத்துக்காக தனியார் பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறேன். சிவனடியாராகவும் இருந்து வருகிறேன். என்னை இறைவழிபாடு செய்ய விடாமல் 2வது மகளும், அவருடன் உள்ள நபரும் தடுக்கின்றனர்.

மேலும், எனது 3 பவுன் செயினை எடுத்துக்காண்டு தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். எனக்கு சொந்தமான வீட்டை, ஆதரவற்றோருக்கு வழங்குவதுடன், என்னையும் கருணை கொலை செய்து கொள்ள உதவுமாறு மனுவில் தெரிவித்துள்ளேன். இவ்வாறு கூறினார். பெற்ற மகளின் கொடுமை தாங்க முடியாத தாய், தன்னை கருணை கொலை செய்ய சொல்லி கலெக்டரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: