×

சென்னையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தாளையொட்டி மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அமைச்சராக எல்லா தகுதியும் உடையவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் உதயநிதியை அமைச்சராக நியமித்தல் இன்னும் நன்றாக இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

மற்ற கட்சிகளில் உருவாக்கப்பட்ட இளைஞரணி அமைப்பு சம்பிரதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவில் உருவாக்கப்பட்ட  இளைஞரணி அமைப்பு சமூகத்துக்கானது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 10 மாவட்டங்களில் ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கும், ஆர்டிபிசிஆர் டெஸ்ட் கட்டாயம் என்பது நீக்கயுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா பூஜ்ய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீனாவை போன்றதொரு நிலை இந்தியாவில் கிடையாது.

நாம் பூஜ்ய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 1.57 கோடி பேர் என்ற அளவில் காப்பீட்டு திட்டத்திற்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது ரூ.22 லட்சம் வரையில் காப்பீடு திட்டத்தில் இருந்து வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவனையில் கட்டாயம்  கொரோனா பரிசோதனைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.


Tags : Minister ,M. Subramanian ,Udayanidhi Stalin ,Chennai , Minister M. Subramanian inaugurated the medical camp on the occasion of Udayanidhi Stalin's birthday in Chennai
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...