×

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு.!

டெல்லி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி 1-க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்ற நிலையில் அதில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. மழையின் காரணமாக போட்டி 15 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் -சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில், 4.5 ஓவரில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தவான் 2 ரன்னிலும் சுப்மன் கில் 19 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

Tags : India ,New Zealand , 2nd ODI match between India and New Zealand affected by rain.
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்