×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை திருநாள். காத்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிவபெருமான் திருமால் மற்றும் பிரம்மனுக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கார்த்தை தீபத் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கமான உற்சாகத்துடன் கார்த்திகை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார், திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் அதிகாலை கொடியேற்றப்பட்டது. இந்த கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதி உடன் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் 10 நாட்கள் காலை, மாலை மாட வீதியில் பஞ்ச மூர்த்திகள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். காத்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் மாதம் 6ம் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மாலை 6மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழா அன்று 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பார்க்கப் படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2,432 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், வேலூர் மார்க்கமாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 59 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 12,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 500 சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுடள்ளது.

Tags : Thiruvandamalai Annamalayar Temple ,Tirukurtika Dipat Festival , Tiruvannamalai Annamalaiyar Temple Tirukarthikai Deepa Festival begins with flag hoisting.!
× RELATED திருவண்ணாமலையில் நாளை முதல் 20ம்தேதி வரை தரிசனம், கிரிவலத்திற்கு தடை