மலேசியாவின் 10வது பிரதமருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: மலேசியாவின் 10வது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராஹிமுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராஹிமுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது கூட்டுறவை மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: