×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழை பெய்யும்; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில பகுதிகளில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கே.பி.கே.கட்டப்பாக்கம், சீர்காழி, ஸ்ரீ பெரும்புதூர், ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்டதானம், பேராவூரணி, வாலாஜாபாத்தில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Center Information , Tamil Nadu will receive rain for 4 days from today due to atmospheric circulation; Chennai Meteorological Center Information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...