×

பிரதமர் சுனக் முடிவால் இங்கிலாந்தில் படிக்க செல்வது கடினம்: புலம்பெயர்வதை தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி: இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் புலம் பெயர்ந்தோர் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில் கடந்த 2021ம் ஆண்டு 1.73 லட்சமாக இருந்த புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு 5.04 லட்சமாக உயர்ந்துள்ளது. சுமார் 3.31 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை உயர்வே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வௌிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை குறைப்பது உட்பட அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளாதாக பிரதமரின்  செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குறைந்த தரம்  பட்டம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களை அழைத்து வருவதை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களில், உயர்நிலை பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் சேர்க்கையை கட்டுப்படுத்துவதும், மாணவர்களை சார்ந்தவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்துவதும் அடங்கும். அதே நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களில் நிதியுதவி வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Chung ,UK , Prime Minister Chung decision makes it harder to study in UK: move to curb immigration
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...