அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சிசோடியா பெயர் இல்லை

புதுடெல்லி: டெல்லி மாநில அரசால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கலால் கொள்கையில் முறைகேடு தொடர்பாக ெடல்லி துணை முதல்வர் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 3 பேர் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் சிசோடியா பெயர் சேர்க்கப்படவில்லை.

முன்னதாக நேற்று முன்தினம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலும் சிசோடியா பெயர் இடம் பெறவில்லை. ‘எனக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அவர்களால் திரட்ட முடியவில்லை’ என சிசோடியா டிவிட்டரில் கூறி உள்ளார்.

Related Stories: