பெண்களை இழிவாக பேசிய பாபா ராம்தேவை கைது செய்யுங்கள்: போலீசில் புகார்

திருப்பதி: பெண்களை இழிவாக பேசிய பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்று மகளிர் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நேற்று முன்தினம் நடந்த இலவச யோகா நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் பங்கேற்று பேசுகையில், ‘‘பெண்கள் புடவை, சல்வார் என எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்பார்கள். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்த ஆடையும் அணியாமல் இருந்தாலும் அழகாகத்தான் இருப்பார்கள்’’ என்றார்.

இதுதொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதில், ‘பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ராம்தேவ் பாபா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் பெண்களை இழிவுபடுத்தி இதுபோன்ற வார்த்தைகள் பேசுவது பாபாக்களுக்கு சகஜம் ஆகிவிட்டது. ஏனெனில், எந்த கருத்து தெரிவித்தாலும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காது என்ற எண்ணத்தில் உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: