சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, கடற்கரை மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில், நம்ம சென்னை செல்பி பாயின்ட் பின்பு மணல் பரப்பில் இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையானது 380 மீட்டர் நீளத்திலும், 3 மீட்டர் அகலத்திலும்  அமைக்கப்படுள்ளது. ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகள் முழுமை அடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ. 27) திறந்து வைக்க உள்ளார். மேலும் டிச. 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திறந்து வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: