நீதித்துறையை மக்கள் அணுகும் நிலை மாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

டெல்லி: நீதித்துறையை மக்கள் அணுகும் முறை மாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்; சட்டங்கள் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட விளிம்பு நிலை மக்களே காரணம் என்கிறார். மேலும் சட்டத்துறையில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை போன்ற நாட்டில் நீதி வழங்கும் நடைமுறை என்பது எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே நீதித்துறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்றார். இந்த சவால்களை அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

Related Stories: