தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்ற மோடி முயற்சிப்பதை காங். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்ற மோடி முயற்சிப்பதை காங். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மோடியின் ஜனநாயக விரோதப் போக்கை காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. தேர்தல் ஆணையர் நியமனத்தை உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார் . அடுத்த மாதம் பணி ஓய்வு பெறும் அருண் கோயலை விருப்ப ஓய்வு கொடுக்க வைத்து மறுநாளே நியமிக்க வேண்டிய கட்டாயம் என்ன? எனவும் அழகிரி சாடியுள்ளார்.

Related Stories: