கொரோனா காலத்தில் ஈடுசெய்யும் விடுப்பு கோரி வீடியோ வெளியிட்ட காவலர் பணிநீக்கம்: டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: கொரோனா காலத்தில் ஈடுசெய்யும் விடுப்பு கோரி வீடியோ வெளியிட்ட காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தன்னை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியதை ரத்து செய்யக்கோரி முதல்நிலை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.

Related Stories: