சென்னை மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது..!!

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. அமைச்சர்களுடன் இணைந்து உதயநிதி தொடங்கி வைத்தார். பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு வசதியாக 300 மீட்டர் முன்பாகவே நிறுத்தங்களில் பெயர் அறிவிக்கப்படும். நிறுத்தங்களின் பெயரை ஒலிபரப்பும் வகையில் பேருந்தின் உட்புறத்தில் 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சென்னையில் 150 மாநகர் பேருந்துகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Related Stories: