ஆளுநர் ரவி அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: ஆளுநர் ரவி அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிரபாகரனின் 68வது பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தியபின் வைகோ செய்தியர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், பாஜகவின் கைப்பாவையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வது அனைத்தும் அப்பட்டமான பொய் எனவும் தெரிவித்தார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம். ஒரே லட்சியம் தமிழீழம், தமிழீழம் மட்டுமே தீர்வு எனவும் வைகோ கூறினார்.

Related Stories: