வியாபாரியை தாக்கியதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தை சேர்ந்தவர் ஈசாக். இவர் வடசேரி கனகமூலம் சந்தையில், முருங்கைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வடசேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுடன் எனக்கு நட்பு உண்டு. அந்த வகையில் வியாபாரம் சம்பந்தமாக நாஞ்சில் முருகேசனிடம் ரூ.2 லட்சம் கடன் கேட்டு இருந்தேன்.

சம்பவத்தன்று இந்த கடன் தொகையை தருவதாக என்னை அழைத்தார். அதன் பேரில் நான் அவரை சந்திக்க புத்தேரி பராசக்தி கார்டன் சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்த நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் பேச்சான்குளத்தை சேர்ந்த மகேஷ் ஆகியோர் என்னை பார்த்ததும், தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி,இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 323, 506 (i) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: