×

குவாட்டருக்கு ரூ.30 கூடுதல் வசூல் டாஸ்மாக் விற்பனையாளருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நெல்லை: நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வேல்முருகன்(45). கடந்த 23-6-2020 அன்று அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குவாட்டர் மதுபாட்டில் வாங்கியுள்ளார். அதில் உச்சபட்ச விலை ரூ.160 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடை விற்பனையாளர் ரூ.190 வசூலித்துள்ளார். இதையடுத்து பணம் செலுத்தியதற்கான ரசீது கேட்டபோது குவாட்டர் மதுபாட்டில் விலை ரூ.180 என குறிப்பிடப்பட்டு ரசீது வழங்கியுள்ளனர்.

இதையடுத்து குவாட்டர் மீது ரூ. 30 கூடுதல் வசூல் செய்தது தொடர்பாக நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வேல்முருகன், வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தலைவர் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் குவாட்டரின் அதிகபட்ச சில்லறை விலை 160 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ள நிலையில், 190 ரூபாய்க்கு விற்பனை செய்த விற்பனை மேற்பார்வையாளர் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து இழப்பீடு தொகையை மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.


Tags : Tasmac , Additional charge of Rs.30 per quarter, Tasmac dealer, 11 thousand fine,
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...