டிச.5 முதல் ஜன.9 வரை சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலுக்கு தமிழகம் முழுவதிலிருந்து பக்தர்கள் சென்று வருவது வழக்கம். அந்தவகையில், தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் வசதிகாக ஐதராபாத் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் டிச.5ம் தேதி முதல் ஜன.9ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும் தமிழகம் வழியே இயக்கப்பட உள்ளது.ஐதராபாத்தில் இருந்து திங்கட்கிழமை மாலை 3.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்தநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 11.50 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

சாமி தரிசனம் செய்து மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு மறுமார்க்கமாக டிச.7 முதல் ஜன.11ம் தேதி வரை புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி, கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஐதராபாத் வந்தடையும். அந்த வகையில், சபரிமலை பக்தர்களுக்கான இந்த ரயில் தமிழகத்தின் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படும்.

Related Stories: