×

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 24 வகை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளுவர் விருது - 2023 மற்றும் 2022ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது (3 விருதுகள்), அண்ணா விருது, காமராசர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது,  திரு.வி.க. விருது,  கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது,  உமறுப்புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10 விருதுகள்), சிங்காரவேலர் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார்  விருது,  சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது, தமிழ்ச்செம்மல் விருதுகள்

(38  விருதுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்). விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணைய வழி வாயிலாகவோ அல்லது இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை என்ற முகவரிக்கு வருகிற 23.12.2022க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம். விருதுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின், முதல்வர் விருது வழங்குவார்.


Tags : Thiruvalluvar Award, 24 category award, can apply
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...