பாக். ஆதரவு கோஷ வீடியோ பாஜ.வுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: பாஜ.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா நேற்று, மத்தியப் பிரதேசத்தில் ராகுலின் நடை பயணம் குறித்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டார். 21 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ‘நடை பயணத்தின்போது பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிடுவது கேட்கிறது. இதுதான் காங்கிரசின் உண்மை,’ என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். பின்னர், இந்த வீடியோ நீக்கப்பட்டது.

இது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த வீடியோ பாஜ.வின் தந்திர துறையால் மோசடியாக தயாரிக்கப்பட்டது. வெற்றிகரமாக நடந்து வரும் ஒற்றுமை நடை பயணத்தை இழிவுபடுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபோன்ற தந்திரங்களை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராக இருக்கிறது. இதற்கு பதிலடி தருவோம்,’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: