×

டெல்லி பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் கெஜ்ரிவால் அரசு ரூ.1,300 கோடி ஊழல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு பரிந்துரை

புதுடெல்லி: டெல்லியில் அரசு பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து ‘சிறப்பு புலனாய்வு அமைப்பு ‘ விசாரணை நடத்த, லஞ்ச  ஒழிப்பு இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில்  முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2015ல்  193  பள்ளிகளில் 2,405 ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததால், சிறப்பு ஏஜென்சி மூலம்  விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி அரசின் விஜிலென்ஸ்  இயக்குநரகம் (டிஓவி), தலைமைச் செயலரிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.  

இது குறித்து  விஜிலென்ஸ் இயக்குநரக வட்டாரங்கள் கூறியதாவது:
 ஒன்றிய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் டெல்லி அரசால் கட்டப்பட்ட  பள்ளிகளில் ரூ.1,300 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இவ்விவகாரத்தில் கடந்த 2020ம் ஆண்டு தனது கருத்துகளை தெரிவிக்குமாறு  ஒன்றிய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையம்,  விஜிலென்ஸ் இயக்குநரகத்திற்கு அறிக்கை  அனுப்பியது. ஆனால், முதல்வர் அலுவலகம் உரிய பதிலை அளிக்கவில்லை.  எனவே, தாமதமான விசாரணை குறித்து விளக்கம்  கேட்டு டெல்லி லஞ்ச ஒழிப்பு  இயக்குநரம் அறிக்கை அனுப்பி இருந்தது.

 இந்த அறிக்கை மீது எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் கவர்னர் சக்சேனா  தலையிட்டு காலதமாதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி தலைமை  செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு  இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.  விசாரணை நடத்தியதில் டெண்டர்  நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை; விதிகள் மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

  இது குறித்து ‘சிறப்பு புலனாய்வு அமைப்பு’ விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்தின் அந்த அறிக்கை தலைமை செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், 1,300 கோடி ரூபாய்  ஊழல் செய்த கல்வித்துறை  மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய   விசாரணை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Tags : Kejriwal ,Delhi ,Special Investigation Committee , Classroom in Delhi schools, Kejriwal government, Rs 1,300 crore scam, Special Investigation Committee to investigate
× RELATED டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால்...