பி.எஸ் டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன்ஸ் படிப்பு சென்னை ஐஐடியில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை: சென்னை ஐஐடியில் 2023ம் ஆண்டுக்காண பி.எஸ். டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. விருப்பமுள்ள நபர்கள் https://onlinedegree.iitm.ac.in. என்ற இணையதளம் மூலமாக, ஜனவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

இந்த திட்டம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறும்போது:

 ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் நேரடிப் பயிற்சி மாணவர்களுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குதல் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தலைப்புகளில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல், கடுமையான மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றால் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டமாக இதனை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 112 மில்லியன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: