டிசம்பர் 6ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க, டிசம்பர் 6ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், டிசம்பர் 7ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இது, மொத்தம் 17 அமர்வுகளை கொண்டது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு பிரச்னைகளை இத்தொடரில் எதிர்க்கட்சிகள் கிளப்ப உள்ளன. இந்நிலையில், இத்தொடரின் அலுவல்களை முடிவு செய்யவும், கூட்டத்தை சுமூக நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க, டிசம்பர் 6ம் தேதி மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டுகிறது. இது தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: