திருச்சி அருகே மில்லில் பதுக்கிய 8 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கைனாங்கரை பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனைக்கு வாங்கி மாவாக அரைத்து விற்கும் மாவு மில் ஒன்று அந்த பகுதியில் இயங்கி வருவதாக மாவட்ட வழங்கல்  அதிகாரி சுப்பையாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அளித்த தகவலின் படி  திருச்சி மண்டல குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல எஸ்பி சுஜாதா தலைமையில், டிஎஸ்பி சுதர்சன், குளத்தூர் தாசில்தார் சக்திவேல், வட்ட வழங்க அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் அங்கு நேற்று மாலை 3 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளை கண்டதும் அரவை மில் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்  தப்பிஓடிவிட்டனர். மேலும் அரிசியை ஏற்றிகொண்டு வெளியே வந்த ஆம்னி வேன் டிரைவர், பெண் உள்பட 3பேரும் தப்பி ஓடினர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரேஷன் அரிசியை விற்பனைக்கு வாங்கி அரைத்து மாவாக விற்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: