எம்பி மனோஜ் திவாரி மூலம் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக சதி செய்கிறது!; டெல்லி துணை முதல்வர் பகீர்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக சதி செய்துள்ளதாகவும், அதன் பின்னணியில் எம்பி மனோஜ் திவாரிக்கு தொடர்பு இருப்பதாகவும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி துணை முதல்வரும், ஆம்ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘குஜராத் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் பாஜகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக சதி செய்துள்ளது. இதற்கு டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு தொடர்பு உள்ளது. ஆனால் இத்தகைய கொலை அச்சுறுத்தலை கண்டு ஆம் ஆத்மி கட்சி பயப்படாது’ என்று பதிவிட்டிருந்தார். துணை முதல்வரின் பதிவை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த டெல்லி போலீஸ் கமிஷனருக்கு, லெப்டினன்ட் கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாஜக எம்பி மனோஜ் திவாரி வெளியிட்ட பதிவில், ‘அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன்.

 ஊழல், தேர்தல் சீட் விற்பனை, சிறையில் மசாஜ் போன்ற வீடியோ எபிசோடுகளுக்கு மத்தியில் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது கோபமாக உள்ளனர். அவர்களின் எம்எல்ஏவும் ஆம்ஆத்மி கட்சியினரால் தாக்கப்பட்டார். டெல்லி முதல்வருக்கு இப்படி நடக்க கூடாது. நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: