தமிழகத்தில் சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் வழிமுறைகளை வகுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்ல தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது என கூறிய நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தையும் வெளியிட ஆணையிட்டனர். மெரினா கடற்கரையின் அழகை அருகே சென்று ரசிக்கவும் உணரவும் நிரந்தர சாய்வு வசதி ஏற்படுத்தப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: