மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மங்களூருவில் கடந்த 19ம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. வழக்கை கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாற்றியது. 2 நாட்களுக்கு முன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ.வுக்கு கர்நாடக காவல்துறை அனுப்பியது. 

Related Stories: