ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்..!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை சித்தாந்தம் வேறு, அதிமுகவின் சித்தாந்தம் வேறு.

பாஜகவை பொறுத்தவரை ஒரு தோழமை உணர்வுடன் மட்டுமே எங்களது அணுகுமுறை உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைய வேண்டும் என பிரதமரோ, அமித்ஷாவோ பேசியது இல்லை, இனியும் அப்படி நடக்காது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை. ஆளுநரை சந்திக்கும் போது அரசியல் பேசவில்லை. பாஜகவுடன் எங்களுக்கு சுமூக உறவு உள்ளது. அதில் எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக செயல்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: