ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம்

புழல்: செங்குன்றம் அருகே நேற்று மாலை புழல் ஒன்றிய மற்றும் ஊராட்சி கிளை திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புழல் ஒன்றிய மற்றும் ஊராட்சி கிளை திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பெ.சரவணன் வரவேற்றார். அவைத் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெய்மதன், ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இனியவன், ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளராக 2வது முறை அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து, வார்டுகள் முழுவதும் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல், திராவிட பயிற்சி பாசறை நடத்துவது, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ஒன்றியம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், அறுசுவை உணவுகள் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் நந்தகுமார் நன்றி கூறினார்.

Related Stories: