×

திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்; 137 பேர் தேர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை சார்பில் மகளிருக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிருக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் டாடா நிறுவனத்தின் மகளிருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குனர் க.விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ஜி.ந.காமராஜ் வரவேற்றார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் கோ.மலர்விழி முன்னிலை வகித்தார்.

ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் துணை மேலாளர் எம்.ராமேஷ்வர், தேர்வு முறை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்க உரையாற்றினார். முகாமில் 107 மகளிர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. அதே போல் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 30 மகளிர்கள் தேர்வு செய்யபட்டனர். அவர்களுக்கும் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதற்கு பிறகு வேலை வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு ஆன்லைன் மூலம் தொழிற்கல்வி பயிலவும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர் என க.விஜயா தெரிவித்தார். முடிவில் மகளிர் திட்ட உதவி அலுவலர் வ.வீரமணி நன்றி கூறினார்.



Tags : Tiruvallur , Employment Camp at Tiruvallur; 137 candidates selected
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...