ராகுலுக்கு கொலை மிரட்டல் ம.பி-யில் ஒருவர் கைது

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரை வெடிகுண்டை கொண்டு கொலை செய்வதாக, மர்ம நபர் ஒருவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து உஜ்ஜைனி போலீஸ் எஸ்பி கூறுகையில், ‘ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய குற்றவாளி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த  நரேந்திர சிங் என்பது அடையாளங்காணப்பட்டது.

கடந்த காலங்களில் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்தார். தற்போது அவரை உஜ்ைஐனியில் கைது செய்துள்ளோம். இந்தூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நரேந்திர சிங்கை இந்தூர் போலீசில் ஒப்படைக்க உள்ளோம்’ என்றார்.

Related Stories: