கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை பிரச்னை; இரு மாநிலங்களிலும் பதற்றம்

மும்பை: கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை  தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எல்லை பிரச்னை இரு மாநில மக்களிடையே மீண்டும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘மகாராஷ்டிராவின் எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மகாராஷ்டிராவின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம். தற்போது வரை இப்பிரச்னை தீர்க்கப்படவில்லை’ என்றார்.

Related Stories: