×

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

கீழக்கரை :  ஏர்வாடி தர்கா மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீதின் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஏர்வாடி தர்காவில் வருடம் தோறும் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் நடைபெறும் என்றுவெளிமாநிலம் மற்றும்உள்ளூர் யாத்திரிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் தலைமை டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் தர்கா ஹக்தார்கள் மற்றும் ஆலிம்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு மவுலிது ஓதப்பட்டன. உலக நன்மைக்காகவும் கொரோனா தொற்றில் இருந்து அனைத்து சமுதாய மக்களையும் விடுபடவேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. வழக்கம்போல் அடிமரம் கொடிமரம் ஊன்றி அதில் கொடி ஏற்றுவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக தர்கா பள்ளிவாசலில் அமைந்துள்ள உயரமான மினாராவில் கொடி ஏற்றப்பட்டது. அதனையொட்டி ஜூலை 4ம் தேதி மாலைஉரூஸ் எடுக்கப்பட்டு ஜூலை 5ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் தெரிவித்துள்ளனர்….

The post ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chandandanadu ,Airwadi Dargah ,Airwadi ,Dargah ,Mahan Sultan ,Ibrahim Shaheed ,Chandanadadu festival ,Chandandanadu festival ,Dinakaran ,
× RELATED ஏர்வாடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்