நீடாமங்கலம் பகுதியில் கொட்டும் பனி பொழிவு தாளடி, சம்பா நடவில் பூச்சி மருந்து அடிக்கும் பணி

*வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தலால் விவசாயிகள் தீவிரம்

நீடாமங்கலம் : டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையை முன்கூட்டியே குறுவை சாகுபடிக்கு திறந்ததால் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 34.808 ஏக்கரில் குறுவை சாகுபடி முடிந்து, தாளடி மற்றும் சம்பா நடவில் பூச்சிமருந்து அடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.டெல்டா மாவட்டமான நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் ஆண்டு தோறும் மூன்று போகம் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த தண்ணீரால் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், திருவாரூர், திருத்துறைபூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, மன்னார்குடி உள்ளிட்ட 10 வேளாண் கோட்டங்களிலும் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடித்து தற்போது தாளடி மற்றும் சம்பா நடவு வயலில் பூச்சி மருந்து அடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்திலையில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு ஜூன் 12ம் தேதி விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்ததால் கர்நாடகா அணைகளின் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைகளில் நீர் நிரம்பி திறக்கப்பட்ட தண்ணீர் லட்சக்கணக்கான கனஅடி வரத்தாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு நான்கு முறை நிரம்பியது. இதனையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் முன் கூட்டியே குறுவை சாகுபடிக்கு மே மாதம் 24ம் தேதியை மேட்டூரில் தண்ணீரை விவசாயத்திற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடிக்கு என மே மாதம் 24ம் தேதி தண்ணீர் திறந்தது. இதுவே வரலாற்றில் முதல் முறையாகும். இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தமிழக முதல்வரை விவசாயிகள் பாராட்டினார்.

மேட்டூர் அணையில் திறந்த தண்ணீரால் டெல்டா மாவட்ட விவசாயிகளில் பெறும்பாளானோர்கள் முன்கூட்டியே குறுவை சாகுபடியை தொடங்கினர். முன் கூட்டியே திறந்த தண்ணீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் விவசாய சாகுபடி பணி செய்தவர்களும், இந்த ஆண்டு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி குறுவை விவசாய பணியை தொடங்கினர். இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 34,802 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தொடங்கியது. சில இடங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள் சம்பா பருவத்தில் ஒரு போகம் மட்டும் சம்பா சாகுபடியை சுமார் 8,448 ஏக்கர் நிளப்பரப்பில் சம்பா சாகுபடி பணிக்கு நாற்றங்கால் தயார் செய்து நாற்று விட்டு தற்போது சம்பா மற்றும் தாளடி நடவு பணியும் தொடங்கி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

கடந்த கோடை பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி பணி நடந்து அறுவடை முடிந்த பிறகே குறுவை சாகுபடி பணி தொடங்கியது. இதன் அறுவடை முடிந்த உடன் தாளடி நடவு பணி நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே சாகுபடி செய்து தாளடி பயிர்களில் மப்பும் மந்தாரமும் இருந்து வரும் நிலையிலும், வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தாளடி நெல் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் பரிந்துரையோடு பூச்சி மருந்து அடிக்கும் பணி நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் ரிஷியூர், கட்டையடி, பெரம்பூர், முல்லைவாசல், பூவனூர், அன்னவாசல், பருத்திக்கோட்டை, வேளாண்மை அறிவியல் நிலையம் வளாகத்தில் உள்ள வயல், காளாச்சேரி, மேலபூவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பூச்சி மருந்து, அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: