ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு கடிதம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டிருந்தார். ஆன்லைன் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று ஆளுநர் வினவியிருந்தார்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தமிழக அரசு உரிய சட்ட விவரங்களுடன் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விவகாரத்தை பொறுத்தவரை உயிரிழப்புகள் ஏற்படுவதை தொடர்ந்து அதற்கான உரிய சட்டம் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அறிக்கையும் பெறப்பட்டது.

இதனடிப்படையில் இதற்கு முன்பே தடை சட்டம் கொண்டுவரப்பட்டாலும் நீதிமன்றத்திற்கு செல்லும்பொழுது எவ்வித பிரச்சனையும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது சட்டப்பேரவை கூடியதன் காரணமாக சட்ட மசோதாவாக கொண்டுவரப்பட்டும் கூட பேரவையில் ஒருமனதாக ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் சட்ட மசோதாவை பொறுத்தவரை ஆன்லைன் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஆலோசித்து சட்டத்துறையின் மூலமாக ஆளுநருக்கு பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்க்கான ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆன்லைன் ரம்மியால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related Stories: