×

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ₹6.33 லட்சம் உண்டியல் காணிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், உற்சவம், மாசிமக திருவிழா, புத்தாண்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இந்த கோயிலில் உள்ள சிவனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் செலுத்தி வருகின்றனர். அதன்படி கோயிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 9 நிரந்தர உண்டியல்களும், 1 திருப்பணி உண்டியலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்து 129 ரொக்க பணம் மற்றும் 11 கிராம் தங்கம், 23 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் இருந்தது. கோயில் செயல் அலுவலர் மாலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Vruddagrieswarar Temple , Vriddhachalam: The work of counting the money offering was done at the Vriddhachalam Vridtagriswarar temple.
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!