×

வரும் 6ம்தேதி கார்த்திகை தீபத்திருநாள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்

முத்துப்பேட்டை : கார்த்திகை தீபமானது அடுத்த மாதம் 6ம்தேதி கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளை அகல் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை திருநாளில் மாலை 6 மணி அளவில் அகல் விளக்கினால் வீடுகள் தோறும் ஜொலித்து காணப்படும். இந்த தீப திருநாள் 3 நாட்கள் அனைவராலும் கொண்டாடப்படும். விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணெயும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக்கொண்டு நமக்கு
பிரகாசமான ஒளியை தருகிறது.

இது போல மனிதர்களும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை உணர்த்துகிறது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலைபகுதிகளில் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் திருக்கார்த்திகை அகல்விளக்குகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏரி, ஆறு, வயல் பகுதிகளில் வண்டல்மண் எடுத்து பக்குவபடுத்தி பெரிய, சிறிய அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து மண்பாண்டம் தொழிலாளர் ரவி கூறுகையில், கடந்த காலங்களில் மண்பாண்டம் செய்ய வண்டல் மண் எடுக்கப்பட்டது. தற்போது கெடுபிடி அதிகமாகவும், சட்டமுறையும் வந்துவிட்டது. அதனால் ஒருலோடு வண்டல் மண் ரூ.1,500 கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் மொத்த விலைக்கு ஆயிரம் சிறிய அகல் விளக்கு ரூ.1,000க்கு கொடுத்தோம். தேவைபட்டால் குறைத்தும் கொடுத்தோம். தற்போது இந்த ஆண்டில் மொத்த விலைக்கு ஆயிரத்துக்கு குறைந்தது கொடுக்க முடியாது கட்டுபடியாகாது. சிறிய விளக்கு சிலரை விலையில் 2 ரூபாய்க்கும், பெரிய விளக்கு 7, 8 ரூபாய்க்கும் கொடுக்கிறோம். தற்போது மானாமதுரையிலிருந்து வேறு ஒரு ரக விளக்குகள் இறக்குமதி செய்து இருக்கிறோம். நாங்கள் செய்த பொருட்களை அங்கு அனுப்புவோம். அங்கு செய்யப்படும் பொருட்கள் நாங்கள் வாங்கி வருவோம்.

இதில் அங்கிருந்து வரப்பட்ட 7 விளக்குகள் உள்ள ஒரு அடுக்கு அகல் விளக்கு 150 ரூபாயிக்கும், 12 விளக்குகள் உள்ள இரண்டு அடுக்கு அகல் விளக்கு 350 ரூபாயிக்கும், 25 விளக்குகள் உள்ள மூன்று அடுக்கு அகல் விளக்கு 500 ரூபாயிக்கும் விற்பனை செய்கிறோம். நாங்கள் தினமும் மண்பாண்ட பொருட்களை செய்து வருகிறோம். தற்போது திருக்கார்த்திகை தீபம் என்பதால் தற்போது இந்த அகல் விளக்கு தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இது முடிந்ததும் வரும் பொங்கலுக்கு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. அப்பகுதியில் இந்த மண்பாண்ட தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளது. அன்றாடும் இதில் பிழைப்பு நடத்தி வந்ததாலும் முன்பு போல பெரியளவில் ஒன்றும் கிடைப்பதில்லை. தற்போது மண்பாண்ட உபயோகம் குறைந்துவிட்டதால் இந்த தொழில் நசிந்து வருகிறது. அடுத்த தலைமுறையில் இவையெல்லாம் அரிதாகிவிடும்.

மண்பாண்ட உபயோகம் ஆரோக்கியமானது என்ற நிலையிலும், மக்கள் ஏனோ உலோக பாத்திரங்களையே நாடுகின்றனர். அதேபோல அகல்களும் பித்தளை, இரும்பு, எவர்சில்வர் உலோகத்தில் தயாரித்து விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனாலும், மண்பாண்ட தயாரிப்புகளை விரும்பி தேடி வருவோருக்காக இவற்றை தயாரித்து குறைந்த லாபம் வைத்து விற்கிறோம்,
என்றார்.

Tags : Karthikai Deepatri day , Muthuppet: Karthikai Deepam is celebrated on the 6th of the next month in Karthikai Nakshatra. On Thirukarthikai V
× RELATED கார்த்திகை தீபத் திருநாளையொட்டி அவல், பொரி, அகல்விளக்கு விற்பனை அமோகம்