மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் CGL Tier 1 தேர்வு தேதியை மாற்ற சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் CGL Tier 1 தேர்வு தேதியை மாற்ற சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். CGL தேர்வு நடைபெறும் அதே நாளில் தமிழக கல்லூரிகளில் முதுகலை செமஸ்டர் தேர்வு நடப்பதால் தேதியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழ்நாட்டுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. தற்போது நடக்கவுள்ள தேர்வில் தேர்வர்களுக்கு வாசலே இழுத்து மூடப்படுவது போல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய தேர்வாணையம் Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, வரை, Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும் என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

2011 இல் Scientific Assistant in IMD Examinations வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017 இல் வெற்றி பெற்ற 1165 பேரில் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர். கடந்த காலங்களில் இந்த தேர்வுகளில் தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. 2022 இல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளன. ஆகவே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டுமென ஸ்டாப் செலக்சன் கமிசன் மற்றும் இந்திய வானியல் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

TN இல் IMD தேர்வுகளில் அறிவியல் உதவியாளரை திட்டமிடுவதற்கான அறிவிப்பை நான் அறிவேன். 2022 டிசம்பர் 14 முதல் 16 வரையிலான தேர்வுகள் 31.10.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். அதே காலகட்டத்தில் தமிழகமும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தமிழ் தேசிய ஆர்வலர்கள் மேற்கண்ட தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலையிலும் மேற்கண்ட பதவிகளுக்கான தேர்வில் இருந்தும் இழக்கப்படலாம்.

மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பில் தமிழகம் உரிய பங்கைப் பெறவில்லை என்ற கவலை ஏற்கனவே உள்ளது. இந்தப் பின்னணியில், தமிழ்த் தேசியத் தேர்வர்களும் ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்யும் வகையில் தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அக்கறையைப் பாராட்டி தேவையானதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

Related Stories: