மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் CGL Tier 1 தேர்வு தேதியை மாற்ற சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை..!!

மதுரை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் CGL Tier 1 தேர்வு தேதியை மாற்ற சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். CGL தேர்வு நடைபெறும் அதே நாளில் தமிழக கல்லூரிகளில் முதுகலை செமஸ்டர் தேர்வு நடப்பதால் தேதியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழ்நாட்டுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. தற்போது நடக்கவுள்ள தேர்வில் தேர்வர்களுக்கு வாசலே இழுத்து மூடப்படுவது போல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: