×

மேகாலயா எல்லையில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் இறந்த 6 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் பயங்கர வன்முறை

ஷில்லாங்: மேகாலயா எல்லையில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் இறந்த 6 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் பயங்கர வன்முறை வெடித்தது. இதனால் மேகாலயா மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

 அஞ்சலியின்போது ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். காவல்துறை சோதனை சாவடிகளை தீக்கரையாகின. சில இடங்களில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.

மேகாலயாவுக்கும், அசாமுக்கும் இடையே எல்லை பிரச்சனை நீடிக்கும் நிலையில் அசாம் எல்லையை ஒட்டிய மேகாலயாவில் ஜெயின்டியா மாவட்டத்தில் கடந்த கடந்த 22ம் தேதி லாரியில் மரம் கடத்துவதாக அசாம் வனத்துறையினர் கைது செய்தனர்.

அப்போது அங்கு குவிந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மொதல்ல வனத்துறை அலுவலர் உட்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று ஷில்லாங்கில் நடைபெற்றது.

அப்போதும் போலீசாருடன் மோதல் வெடித்ததால் மேகலாயாவின் 7 மாவட்டங்களில் செல்போன் சேவை ரத்து மற்றும் இணைய சேவை ரத்து ஆகியவை அடுத்த 48 மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடரும் பதற்றமான சூழல் இருமாநில எல்லை பேச்சுவார்தையையும் பாதித்துள்ளது.


Tags : Meghalaya border , Terrible violence also at a memorial service for 6 people who died in police firing on the Meghalaya border
× RELATED அசாம்- மேகாலயா எல்லை பிரச்னை இன்று 2-ம் கட்ட பேச்சு