சென்னை மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகளை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகளை தாக்கி செல்போன், பணம் பறிக்கப்பட்டது. தெலுங்கானாவைச் சேர்ந்த பீமாராவ், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீரை அரிவாளால் வெட்டி 2 செல்போன், ரூ.2000 பறிக்கப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்ட மாட்டான்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக், சலீம், ஜீவா மற்றும் விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த 2 தொழிலாளிகளும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: