×

பெண் மர்மச்சாவு விவகாரம் செல்போனில் பல ஆண்களுடன் பேசியதால் கொலை செய்தோம்: கைதான கணவர், தாய், தந்தை வாக்குமூலம்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (30). மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார். இவரின் மனைவி சுமித்ரா (26). 9 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம்தேதி வீட்டின் படுக்கை அறையில் சுமித்ரா மயங்கி கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் வந்து பார்த்தபோது சுமித்ரா இறந்து கிடந்தார். அவரது சடலத்தை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சுமித்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியதை அடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இச்சம்பவம் குறித்து மீன் பிடிதுறைமுக போலீசார் வழக்குபதிவு செய்து, மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சுமித்ரா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி சுமித்ராவின் கணவர், அவரது தந்தை செல்வகுமார், தாய் ரெஜினா மற்றும் உறவினர்களிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் செல்வம், சுமித்ராவின் தாய், தந்தை ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனால், இறந்த பெண்ணின் தாய் ரெஜினாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீஸ் நடத்திய விசாரணையில்,  தாய் ராஜினா அளித்த வாக்கு மூலத்தில், ‘’சுமித்ராவும், செல்வமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கூட்டு குடும்பமாக திருவெற்றியூர் பகுதியில் வசித்து வந்தோம். அங்கு சுமித்ராவுக்கு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதால், அந்த வீட்டை காலி செய்துவிட்டு, புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்கு குடும்பத்துடன் வந்தோம். இங்கு வந்த பின்பும் பல்வேறு ஆண்களுடன் சுமித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. எந்த நேரமும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பார்.

இதனை, பலமுறை நானும், எனது கணவரும் கண்டித்தும் திருந்தவில்லை. சம்பவத்தன்று காலையில் வீட்டைவிட்டு சென்ற சுமித்ரா மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது, சாப்பிடவில்லை. சமையல் செய்யாமல் எங்கு சென்று வந்தாய் என்று கேட்டதற்கு கோயிலுக்கு சென்றேன் எனக் கூறினார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனது கணவரும், சுமித்ராவின் கணவரும் இருந்தனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து எங்களை சமாதானப்படுத்தினர்.

இதனையடுத்து, படுக்கை அறையில் இருந்த சுமித்ராவின் கையை எனது கணவர் பிடித்துக் கொண்டார். அவரது காலை செல்வம் பிடித்துக்கொண்டார். இதன்பின்னர் வாயை பொத்தி நான்தான் கழுத்தை நெரித்தேன். இதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுமித்ரா மயக்கம் அடைந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தோம். அவரை காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனது மகளை கொலை செய்யும் எண்ணத்தில் செய்யவில்லை. மகளை பயமுறுத்துவதற்காக செய்தபோது இப்படி நடந்துவிட்டது என போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக இன்ஸ்பெக்டர் ஜான்வின் டேனி, குற்றவாளிகளான   கணவர் செல்வம், அவரது தந்தை செல்வகுமார், தாய் ரெஜினா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Female mysterious affair with multiple men on cell phone We killed because we talked, husband, mother, father confessed
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...