மெரினா கடற்கரையில் 10 கடைகளில் கொள்ளை

சென்னை: மெரினா கடற்கரையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு கடைகளை வியாபாரிகள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பீர்முகமது (30) என்பவரின் கைக்கடிகராம் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் கடை உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

அதேபோல், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் நைனா முகமது (42) என்பவரின் கைக்கடிகாரம் கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், பெரம்பூர் இஸ்மாயில் தெருவை சேர்ந்த பஷீர் அலி என்பவரின் தொப்பி விற்பனை கடையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், சேப்பாக்கம் சின்ன தம்பி தெருவை சேர்ந்த தஸ்தகீர் (49) என்பவருக்கு சொந்தமான பை விற்பனை கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், அசோக் என்பவருக்கு சொந்தமான பொம்மை கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், அஞ்சலை என்பவரின் பேன்சி ஸ்டோர் கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், மேடவாக்கம் பகுதியை சேர்நத் துரைராஜ் (48) என்பவருக்கு சொந்தமான கடையில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இந்த திருட்டு அடுத்தடுத்த 10 கடைகளில் நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அனைவரும் அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மெரினா கடற்கரையில் பொருத்தப்பட்டள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: