அந்தமான் தீவில் நாளை ஜி20 பிரதிநிதிகள் மாநாடு

உதய்பூர்: இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் 17வது உச்சி மாநாட்டில், இந்த தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், இந்த பொறுப்பை டிசம்பர் 1ம் தேதிதான் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. பின்னர், அடுத்த ஓராண்டுக்கு இந்த அமைப்பின் 200 மாநாடுகளை நடத்த அது திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், ஜி20 அமைப்பின் பிரதிநிதிகள் மாநாடு அந்தமானில் நாளை நடைபெற உள்ளது.

அந்தமானில் பிரபலமாக அறியப்படும், ‘ஹவ்லாக் தீவு’ எனப்படும் ‘ஸ்வராஜ் தீவில்’ இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த தீவிற்கு தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து இரண்டரை மணி நேரம் கடல் மார்க்கமாக செல்ல வேண்டும். இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள், இன்று போர்ட்பிளேயர் வருகின்றனர்.

அங்கிருந்து அவர்கள் ஹாவ்லாக் தீவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். நாளை நடக்கும் மாநாட்டில், அடுத்த ஓராண்டுக்கு இந்தியா நடத்த உள்ள ஜி20 மாநாடுகள் பற்றிய விளக்கங்களை, இந்திய பிரதிநிதிகள் இதில் அளிக்க உள்ளனர். 27ம் தேதி பிரதிநிதிகள் தங்கள் நாட்டுக்கு செல்கின்றனர்.

Related Stories: