வன்கொடுமை வழக்குகளின் புலன்விசாரணையில் மாவட்ட விழிக்கண், கண்காணிப்புக்குழுவின் தலையீடு தவிர்க்க வேண்டும்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை

சென்னை: பஞ்சாயத்து தலைவராக ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை துணை தலைவர் இழிவுபடுத்தியதாகவும், தன்னுடைய மனைவி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீறி நாற்காலியில் அமர்ந்தால் கொலை செய்யப்படுவார் என்று தெரிவித்து மிரட்டல் விடுத்ததாகவும், தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். அவ்வறிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அக்குழு இன்றுவரை நிலுவையில் வைத்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவும் தொடர்ச்சியாக இதே போன்று அணுகு முறையைக் கையாண்டு வருவதைக் கவனித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சில முக்கிய பார்வைகளை தமிழக அரசின் கவனத்திற்கு முன்வைக்கிறது.

எனவே மாவட்டங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் காவல் அதிகாரிகள் இனி எதிர்மறை இறுதி அறிக்கைகளுக்கு மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்புதல் கோரும் போக்கை கைவிட வேண்டும் என்று அரசு வலியுத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்கிறது. மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளரும் காவல்துறை அதிகாரிகளின் மேற்குறிப்பிட்ட அணுகுமுறைகளை ஊக்குவிக்கக் கூடாது. எனவே புலன் விசாரணை அதிகாரி ஏற்கனவே தயார்செய்திருக்கும் இறுதி அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இவ்வாணையம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: