ஜம்மு காஷ்மீரில் டிரோனில் இருந்து பணமழை: ஆயுதங்களும் வீச்சு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து டிரோன் மூலம் வீசப்பட்ட ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 5-6கி.மீ. தொலைவில் உள்ள ராம்கர் மற்றும் விஜய்பூருக்கு இடையே காலை 6.15மணியளவில் பிஸ்டல், வெடிகுண்டுகள் மற்றும் பணம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து டெட்டனேட்டர்கள் சென்று ஆய்வு செய்தபோது, இரண்டு சீன துப்பாக்கிகள், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றினர். ஒரு மரப்பெட்டியில் வைத்து இந்த பொருட்கள் வீசப்பட்டு இருந்தன. இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் மகாஜன் தெரிவித்தார்.

Related Stories: