தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் உடலுக்கு கட்சி தலைவர்கள் அஞ்சலி: நாளை உடல் அடக்கம்

ஆலந்தூர்: தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஆலந்தூர் 165வது வார்டு கவுன்சிலருமான நாஞ்சில் பிரசாத் (56) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். இவருக்கு சுதா என்ற மனைவியும் காவியா, அனன்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நாஞ்சில் பிரசாத் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

நாஞ்சில் பிரசாத் உடலுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், பகுதி செயலாளர் பி.குணாளன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜெ.கே.மணிகண்டன், சாலமோன், செல்வேந்திரன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், தேவி யேசுதாஸ், அமுத பிரியா செல்வராஜ், பகுதி நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜன், முரளிகிருஷ்ணன், எம்ஜி.கருணாநிதி, வழக்கறிஞர் ஆனந்தகுமார், சேது செந்தில், உள்ளகரம் ஜி.செந்தில், சதாசிவம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.விகேஎஸ்.இளங்கோவன், அவரது துணைவியார் வரலட்சுமி, விஜய் வசந்த் எம்பி, கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன், கேசவ பெருமாள், பிராங்கிளின் பிரகாஷ், ஏ.வி.தனசேகரன், ரோமியோ, மோகன் குமார் மோகனரங்கம், முரளி, தளபதி பாஸ்கர், ஆர்.ஜி.பகத்சிங், பன்னீர்செல்வம், கனி பாண்டியன், விவேக், கீதா ஜனார்த்தனன், ஆலிஸ் மனோகரி, எம்.ஜி.மோகன், சீதாபதி,

ஐயம்பெருமாள், கோகுல கிருஷ்ணன், லயன் வி.காமராஜ், எம்பி.நேரு ரோஜா ஆதம் பிரகாஷ், ஆர்விஆர்.அருள், ஆவின் ஆனந்தன், கஜேந்திரன், ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், சுகாதார நல அலுவலர் டாக்டர் சுதா, மெட்ரோ குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் கல்யாணி ராஜசேகர், ஹார்ட்டின் ரிசாரியோ, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் விஎன்பி. வெங்கட்ராமன், (ஓபிஎஸ்) அதிமுக பகுதி செயலாளர் பரணி பிரசாத் (ஈபிஎஸ்), மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹரி உள்பட பலர் நாஞ்சில் பிரசாத் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாஞ்சில் பிரசாத் உடல் நாளை காலை 10 மணிக்கு ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: