மீஞ்சூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நவம்பர் 26-ம் தேதி அன்று காலை 6 மணி முதல் 28-ம் தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும் பகுதி 4-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் என சென்னைக் குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்தது.

மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 26 அன்று காலை 6 மணி முதல் 28.11.2022 அன்று காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்க்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் கைபேசி எண்.8144930901,  மணலி கைபேசி எண்.8144930902, மாதவரம் கைபேசி எண்.8144930903, பட்டேல் நகர் கைபேசி எண்.8144930904  மற்றும் வியாசர்பாடி தலைமை அலுவலகம் சிந்தாதிரிப்பேட்டை புகார் பிரிவுக்கு 044-4567 4567  என குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: