நீலகிரி, முதுமலை வனப்பகுதியில் பரவிக் கிடக்கும் அந்நிய மரத்தை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படும்: வனத்துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: நீலகிரி, முதுமலை வனப்பகுதியில் பரவிக் கிடக்கும் அந்நிய மரங்களை அகற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு மேற்கொள்ளப்படும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வனப்பகுதியில் பரவிக் கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக ஐகோர்ட்டில் பல வழக்கு விசாரணை செய்யப்பட்டது. அந்நிய மரங்களை அகற்றி விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.4.2 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. டிசம்பர் 22ம் தேதிக்குள் வனத்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: