×

மேகாலயாவில் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

ஷில்லாங்: மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிமீ தொலைவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த ஜூன் மாதம் டூரா நகரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 43 கிமீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. உயிர் சேதமோ பொருட்சேதமோ இல்லை.

இந்நிலையில் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது இந்த அதிர்வு ஏற்பட்டதால் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Meghalaya , Earthquake in Meghalaya: 3.4 on the Richter scale
× RELATED மேகாலயா முதல்வர் பிரசாரத்தில் ரூ.1 கோடி பறிமுதல்